இந்தியாவில் VOIP பயன்படுத்தலாமா?

இந்த பதிவை December 11th, 2007 அன்று போட்டுத் தாக்கியவர் அல்வாசிட்டி.விஜய்

இந்தியாவில் வாய்ப்களை பயன்படுத்தலாமா? வாய்ப் பயன்படுத்துவது இந்தியாவில் சட்டப்படி செல்லுபடியாகாது என்று பயமுறுத்திக் கொண்டுதானிருக்கிறார்கள். call initiation and call termination என்று இரண்டு வகை உண்டு. PSTN (Public switch telephone network) என்று சொல்லப்படுவது யாதெனில் நமது டெலிபோன் எக்ஸேஞ்ச் வழியாக இயங்கும் தொலைப்பேசிகள். இணையத்தின் வழியாக callகளை தொடங்கி(call initiation) எந்த நாட்டுக்கு வேண்டுமானாலும் பேசுவது, ஒரு கணனியிலிருந்து இன்னொரு கணனிக்கு பேசுவது TRAI (Telephone Regulatory Authority of India)-ஐ பொருத்தவரை சட்டப்படி செல்லுபடியாகும். தொலைதூர கால்களை இந்தியாவின் PSTN-ல் (call termination) முடிவடையச் செய்வது மட்டும் சட்டப்படி குற்றமாகும். call termination என்று சொன்னால் இந்த காலத்தில் மென்பொருளில் இயங்கும் PBX-கள் வந்து விட்டன. மென்பொருள் PBX-களை வைத்துக் கொண்டு இணையத்தின் வாயிலாக அதாவது வாய்ப் வழியாக உலகத்தில் எங்கோ ஆரம்பித்த callகளை இந்தியாவின் தொலைத்தொடர்பு எக்ஸ்சேஞ்களுக்கு அனுப்பி லோக்கல் ரேட்டில் வெளிநாட்டிலிருந்து பேச அனுமதிப்பது மட்டும் சட்டப்படி குற்றமாகும்.மென்பொருள் மற்றுமல்ல VOIP சுவிட்சுகளையும் பயன்படுத்தி இந்த கால் டெர்மினேசன் பண்ணலாம்

தொலைதொடர்பு துறைக்கு இருக்கும் ஒரே நியாயமற்ற கவலை வாய்ப்களால்(VOIP) தொலைத் தொடர்பு துறை நசுங்கி விடுமோ என்ற பயம் தான். கால் டெர்மினேசனுக்கு வாங்கும் கனெக்ஷன் fee -கள் அதிகமாக இருப்பதால் எந்த நாட்டிலிருந்து இந்தியாவுக்கு பேசினாலும் மற்ற நாடுகளுக்கு பேசும் விலையை விட அதிகமாகவே இருக்கும். நாளைய உலகை ஆளப்போவது வாய்ப்கள் தான். வாய்ப்பின் அடுத்த முன்னேற்றம் மொபைல் வாய்ப் கள். நோக்கியாவின் N95 முதலான மொபைல்கள் இணையத்தை wi-fi மூலமாக தொடர்பு கொள்ளும் வசதி உண்டு. இந்த வசதி mobile voip-களுக்கான வித்தாக அமைகிறது. இன்னும் சிறிது காலத்தில் எங்கும் கம்பியில்லா இணையத்தொடர்பாகி(wi-fi) விடும் போது, mobile voip-கள் கொடுக்கப்போகும் வாய்ப்புகள் ஏராளம் என்பது மட்டும் உறுதி.

இந்தியாவில் இன்னும் அமெரிக்கா, ஐரோப்பா போல புற்றீசல் கிளம்பிய மாதிரி வாய்ப் கம்பெனிகள் கிளம்பவில்லை என்பதற்கு TRAI -ன் நியாயமற்ற பயமும், வாய்ப் கம்பெனிகள் மீதான வரி விதிப்புகளும் தான். இந்தியாவிலிருந்து Tringme.com -ன்னு ஒரு வாய்ப் கம்பெனி வச்சிருக்கிறவரு என்னமா கவலை பட்டிருக்கருன்னு இங்கே பாருங்க. இருந்தாலும் இந்தியாவில் போன்வாலா முதல் கொண்டு சிஃபி டாக் வரை எல்லோரும் 1 ரூபாய் அல்லது 2 ரூபாயில் உலக நாடுகளை அழைக்கும் வசதியை கொண்டு வந்து விட்டது. இந்தியாவிலிருந்து உலகநாடுகளுக்கு வாய்ப் சர்வீஸ்களை கொடுக்கும் ஒரு பெரிய லிஸ்ட் இங்கே… MTNL-ன் வாய்ப் சர்வீஸ் பற்றி இங்கே….

அதனால் இந்தியாவிலிருந்து VOIP-ல் பேசுவது சட்டப்படி செல்லும். ஹிந்துஸ்தான் டைம்ஸில் வந்த ஒரு கட்டுரையையும் இங்கே படிச்சி பாருங்க.

டிசம்பர்’07 நிழற்பட போட்டிக்கு - பூக்கள்

இந்த பதிவை December 9th, 2007 அன்று போட்டுத் தாக்கியவர் அல்வாசிட்டி.விஜய்

வேலைப்பளு இருந்தாலும் தமிழில் புகைப்படக் கலை வலைப்பூ நடத்தும் டிசம்பர்’07 போட்டிக்கு நான் எடுத்த சில பழைய நிழற்படங்கள்.


IMG_0572

Flower

மேலிரண்டு படங்கள் மட்டும் போட்டிக்கு….

மற்றவையெல்லாம் உங்கள் பார்வைக்கு…

COLOR PURPLE

IMG_0573


மேலும் அதிக படங்களுக்கு இங்கே

தமிழ் தாய் வாழ்த்து - பொருளுரை

இந்த பதிவை November 1st, 2007 அன்று போட்டுத் தாக்கியவர் சங்கர்

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தைக்கு எழில் ஒழுகும்

நீர் மிகுந்த கடல் என்னும் ஆடை உடுத்திய நிலம் என்ற பெண்ணுக்கு அழகு ஒழுகும்
(வழியும்)

சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
சீர் ஆரும் வதனம் எனத் திகழ் பரதக் கண்டம் இதில்

சிறப்பு மிகுந்த முகம் என விளங்குகின்ற பரதம் என்ற நம் இந்திய கண்டத்தில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்

தென்னாடும் அதில் சிறந்த திராவிடர்களின் நல்ல செல்வ நாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
தக்க சிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே

தகுந்த வாறு தோன்றும் பிறை போன்ற நெற்றியும் அந்த நெற்றியில் இட்ட வாசம் கொண்ட
பொட்டுதான்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
அத்திலக வாசனைபோல் அனைத்து உலகும் இன்பம் உற

அந்த திலகத்தில் இருந்து வரும் வாசம் போல் எல்லா உலகமும் இன்பம் பெறுமாறு

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே!

எல்லா திசைகளிலும் புகழ் மணக்கும்படி இருக்கின்ற பெருமை மிக்க தமிழ் என்னும்
தெய்வ மகளே!

உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே
உன் சீரி இளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

உன் சிறப்பு பெற்ற இளமையை (இன்றும் தக்க வைத்துக்கொண்டு இருக்கும்) திறமையை
எண்ணி எம் செயல்களை மறந்து உன்னை போற்றுவோமே

வாழ்த்துதுமே
வாழ்த்துதுமே

போற்றுவோமே ! போற்றுவோமே!

———
நீராரும் = நீர் + ஆரும் = நீர் நிறைந்த (கண்ணார கண்டேன், வயிறார உண்டேன்)
மடந்தை = பெண்
ஒழுகும் = வழியும் ( நிறைந்த அழகி என்று பொருள்)
சீர் = சிறப்பு
வதனம் = முகம்
திகழ் = விளங்கும் (exist)
கண்டம் = பெரிய நிலம் (continent)
தக்க = பொருத்தமாக அமைந்த (fitting)
தரித்த = அணிந்த

நறு = வாசம்
திலகம் = பொட்டு
உற = வந்து சேர
தெக்கணம் = தென் நாடு
திராவிடம் = தென் இந்தியா
திரு = செல்வம்

அணங்கு = தெய்வ மகள்
வியந்து = ஆச்சிரியம்

——————————————-

பின்குறிப்பு : இந்த பதிப்பு அன்புடன் குழுமத்தில் வேந்தன் அரசு அவர்கள் பதித்தது. அவர்களுக்கும், அன்புடன் கூகுள் குழுமத்திற்கும் மிக்க நன்றி

என்றும் அன்புடன்
சங்கர்

செப்டம்பர்’07 மாத நிழற்பட போட்டிக்கு - “வண்ணங்கள்”

இந்த பதிவை September 6th, 2007 அன்று போட்டுத் தாக்கியவர் அல்வாசிட்டி.விஜய்

தமிழில் புகைப்பட கலை வலைப்பூ நடத்தும் செப்டம்பர்’07 மாத போட்டிக்கு என்னுடைய இரண்டு நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.

தலைப்பு : வண்ணங்கள்

ஆம் உலகம் வண்ண மயமானது தான். டிஜிட்டல் நிழற்படத்தில் போஸ்ட் ஃப்ராஸஸிங் செய்து வண்ணத்தை கொஞ்சம் ஏற்றி வைத்தால் உலகம் இன்னும் வண்ணமயமாகி விடுகிறது.

இந்த போட்டிக்காக என்னுடைய நிழற்பட கருவியை தூக்கிக் கொண்டு அலைய நேர அவகாசம் கிடைக்கவில்லை. என்னுடைய புகைப்பட தொகுப்பிலிருந்து எடுத்த இரண்டு படங்களை போட்டிக்காக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

பேஜ்லர் அறை:

ஆண்கள் நிறைய பேர் இந்த பேஜ்லர் அறையை கடந்து தான் வந்திருக்க வேண்டும். பேஜ்லர் அறை என்பது கனவுகளால் நிரம்பியது. கல்லூரியை கடந்து வேலைக்காக காத்திருக்கும் பேஜ்லர் ஆனாலும் சரி, நல்ல வேலை கிடைத்து அடுத்து எதிர்கொள்ளப்போகும் திருமணத்துக்காக பல வித கனவுகளுடன் காத்திருக்கும் பேஜ்லர் ஆனாலும் சரி, பேஜ்லர் வாழ்க்கை என்பது ஆணின் வாழ்க்கையின் முக்கியமான கட்டம். யார் கனவுக்கு வண்ணமில்லை என்று சொன்னது. விஞ்ஞானிகள் கனவுக்கு வண்ணமில்லையென அடித்து சொன்னாலும் நான் அவர்களை திருப்பி அடித்து கனவுகளுக்கு வண்ணமுண்டு என்று மாரியாத்தா மீது சத்தியம் செய்வேன்.

சில சதுர அடி அறை. அறை முழுவதும் நிரம்பி வழியும் நண்பர்கள். வேர்வையும் புழுக்கமும் அறை முழுவதும் வியாப்பித்திருக்க, ஒருவருவரோடு ஒருவர் ஒட்டிக் கொண்டி பாய்களில் படுத்தப்படி மேற்கூரையை பார்த்தப்படி நேற்றைய நாளைய கனவுகளை கதைத்தப்படி இருந்த வண்ண வாழ்க்கை திருமணமாகி மனைவி குழந்தை சுற்றங்கள் என்று சுருங்கிப்போகும் போது ஒரே வண்ணத்தை மட்டுமே வாழ்க்கை கவர்ந்துக் கொண்டோடுகிறது.

என்னுடைய சகோதரனின் ஒர் அறை வீட்டில் தங்கியிருந்தப் போது ஏனோ என்னுடைய பேஜ்லர் அறையும், வாழ்க்கையும் நண்பர்களும், வண்ணக்கனவுகளும் வந்துப் போக தவறவில்லை. கனவின் வண்ணத்தை புகைப்பட கருவி பிடிக்க முடியாது என்பதாலோ என்னமோ அந்த அறையையாவது ஞாபகார்த்தமாக நிழற்படம் எடுக்க என்னை தூண்டியது.

வெளியே தூங்கி வழியும் ஒரு டங்ஸ்டன் பல்பு, மஞ்சள் சுண்ணம் அடித்த வாசல், பிங்க் நிற உட்சுவர், உள்ளே எரியும் ட்யூப் லைட், நாங்களும் கம்ப்யூட்டரைஸ்ட் பேச்சுலர் என சொல்லும் அந்த அறை. அந்த அறையின் வண்ணங்களை எப்படி பிடிப்பது? பகல் பொழுதும் வண்ணங்களை சொல்லுமா என்ற நிச்சயமற்ற தன்மை.

நீண்ட நாட்களாக long exposure போட்டோகிராபி பண்ண வேண்டுமென்ற ஆசை. நியூயார்க்கோ, சிகாகோ டவுண்டவுனை பிடிக்க மட்டும் தானா long exposure? அந்த வீட்டையும் long exposure-ல் சுட்டு விடலாமென ஆசை. 5 செகண்ட் exposure -ல் +2 மற்றும் -2 ப்ராக்கெட்டட் எக்போஸர் செய்து 3 படங்களை பிடித்துக் கொண்டேன். அறையின் வண்ணங்களை தூக்கலாக்க மூன்று படங்களையும் லேயர் வழியாக இணைத்து contrast அட்ஜெஸ்ட் செய்து post production-ல் வெளி வந்த படம் தான் கீழே உள்ளது. பேச்சுலர் அறையும் அந்த வண்ணங்களையும் பார்த்த பிறகு நான் “பேச்சு”இலர்.

Indian Middle class house

காயாகி-கனியாகி-கடிப்பட்டு போன வாழ்க்கை

இது என்ன பழம் என்று தெரியவில்லை. நியூஜெர்சி மெட்டாச்சின் இரயில் நிலையத்தில் எடுத்தது. கொத்தாக தொங்கிக் கொண்டிருந்த அந்த சிறிய பழங்களின் வண்ணங்களின் கூட்டு என்னை கவர்ந்தது. இது ஓரளவு மேக்ரோ போட்டோகிராபி தான். அந்த பச்சைக்காய் குடும்பத்தின் மிக இளைய உறுப்பினரையும், மஞ்சள் காய் adolescent வயதில் இருக்கும் ஒரு குடும்ப உறுப்பினரையும், சிவப்புக்காய் குடும்பத்தின் மூத்த உறுப்பினரையும், கடிப்பட்ட பழம் உலகை விட்டுப்போக இருக்கும் மிக மூத்த உறுப்பினரையும் அந்த பச்சைக்கிளை குடும்பம் என்பதாகவும் உருவகம் செய்துக் கொள்ளலாம்.

color_fruits

மேலே இரண்டு படங்களும் போட்டிக்கு சமர்பணம்.

கீழே உள்ள படம் சும்மா உலுலுலுலாய்காக… போட்டோஷாப்பில் விளையாடி பழங்களை மட்டும் cutout செய்தப்போது…

fruit_cutout

சாமியார்களும் நானும் - சில கிளு கிளு தேடல்களும்

இந்த பதிவை August 14th, 2007 அன்று போட்டுத் தாக்கியவர் அல்வாசிட்டி.விஜய்

எனக்கு சின்ன வயதிலிருந்தே ஒரு தேடல் உண்டு. எப்படி ஆரம்பித்ததோ தெரியவில்லை பிரம்மச்சாரியத்தை பற்றிய தேடல் தான் முதலில் ஆரம்பமானது. புலன்களை அடக்கி சுக்கிலத்தை கபாலத்தில் ஏற்றினால் கபால மோட்சம் கிடைக்குமென நூலக புத்தகங்கள் கூற ஆரம்பித்தன. சுக்கிலம் என்றால் என்ன என்று தெரிந்துக் கொள்ளவே “நான் ஏன் பிறந்தேன்” “நான் எப்படி பிறந்தேன்” ‘மாதிரி’யான புத்தகங்களை நூலகத்தில் தேட ஆரம்பித்தேன். ‘மாதிரி’ என்று ஏன் சொல்ல வந்தேனென்றால் “Reproduction organ” பற்றிய அனாடமி புத்தகமாக இருந்தாலும் அந்த வயதில் அது ஒரு ‘மாதிரி’ தான். பாளையங்கோட்டை நூலகத்தில் சைக்காலஜி பகுதியில் எவனும் சும்மா கூட தலைவச்சி படுக்கமாட்டான். ஆட்கள் அற்றுப் போன சைக்கலாஜி செக்ஷனில் அனாடமி புத்தகத்தை பதுக்கி வைத்து தினமும் அரைமணி நேரம் கால் கடுக்க நின்று அதே இடத்தில் படித்து சுக்கிலத்தை அறிந்துக் கொள்வதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது.

பக்தி,சமய, தத்துவ புத்தகங்களை அலசி ஆராய்ந்ததில் அறிந்த சில விசயங்கள்:

1. விந்து போன்ற இனப்பெருக்கத்துக்கு உதவும் உடற்பொருட்களே ஆசையை தூண்டுகிறது. வழக்கம் போல் புத்தர் போட்டுத்தாக்கிய “ஆசையே துன்பத்திற்கு காரணம்”.
2. சுக்கிலத்தை நாடி நரம்பின் வழியாக மேலேற்றி மேலேற்றி ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் இருத்தினால் சமாதி கிட்டும்.[உண்மையிலேயே சமாதி தான்]
3. பிரம்மாச்சாரியம் என்பது ஆணுறுப்பு குழாய் வழியாக பாலை உறிஞ்ச வேண்டும். பிரம்மச்சாரிய சாமியார்கள் இதை அடிக்கடி செய்வார்கள் [என்னாங்கட! ஆணுறுப்பு என்ன அன்னப்பறவையாட பாலை மட்டும் உறிஞ்சி எடுப்பதற்கு]
4. சில புத்தகங்கள் கொஞ்சம் சயிண்ட்டிபிக்காக சொல்ல வந்தது என்னவென்றால் உடம்பில் இருக்கும் பல சுக்கிலங்கள் ஒவ்வொரு சுரப்பி வழியாக சுக்கிலத்தை ஏற்றினால் மோட்சத்தில் ஒவ்வொரு படிகளை தாண்டிய மாதிரி ஆகிவிடும். [டேய்! சுரப்பி என்னடா அகல்விளக்கா? சுக்கிலத்தை ஏற்றி எரிய வைப்பதற்கு]
5. etc., etc.,

இது போன்ற உத்தியில் இறங்கி பிரம்மச்சாரியத்தை கடைப்பிடித்து மோட்சம் அடைவது என்று டிசைட் பண்ணி பால் ஈல் எல்லாம் வாங்கி ரெடியாக இருந்த போது தான் நான் கேள்விப் பட்ட ஒரு நிகழ்ச்சி என்னை உலுக்கி வைத்தது. அது தான் விவேகானந்தர் இறப்பு பற்றிய செய்தி. விவேகானந்தார் சுக்கிலத்தை ஆயிரம் இதழ் கொண்ட கபாலத்தில் ஏற்றி வைக்கும் போது மூக்கு வழியே இரத்தம் வந்து செத்துப் போனார் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான். இந்த செய்தியை கேள்விப்பட்டவுடன் தான் என்னுடைய சுய அறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. அதாவது சுக்கிலத்தை ஏற்றும் போது விவேகானந்தருக்கு மூக்கில் இரத்தம் வந்த மாதிரி சுக்கிலம் பைபாஸ் ஆகி மூக்கு வழியாக வந்து விட்டால் என்ன செய்வது? எல்லாரும் பாலை அப்படியே உரிய ஆரம்பித்தால் கட்டாயம் ஸ்ட்ரா தட்டுப்பாடு வரும். ஸ்ட்ரா உற்பத்தியாளர்களின் பொருளாதார சரிவுக்கு நான் காரணமாகி விடக்கூடாது என்று உள்ளுருத்தால் தினம் தினம் என்னை கொல்ல ஆரம்பித்தது நான் பிரம்மச்சாரிய விரதத்தை கைவிடலாம் என அப்போதே உத்தேசித்து விட்டேன். இன்னொரு நண்பன் விவேகானந்தர் ஆஸ்துமாவால் தான் முக்தியடைந்தார் என ஆயிரம் தடவை என்னை தட்டிச் சொல்லியும் அந்த சுக்கில மேட்டர் இன்னும் என் cereberal-லிருந்து நீங்கவில்லை.

என்னுடைய அடுத்த தேடல் ஹிப்னாடிஸத்தை பற்றியது. பன்னிரெண்டாம் வகுப்பு வந்த பிறகு ஸ்கூல் பெண்களை வசியம் பண்ண வேண்டியது அக்காலக்கட்டத்தில் அத்தியாவசியமான ஒன்று. திரும்ப கைக்கொடுத்தது பாளை மத்திய நூலகம். “ஹிப்னாடிசம் செய்வது எப்படி?” என்பதை மெர்வின் முதல் கடம்பூர் கணேசன் எழுதிய அனைத்துப் புத்தகத்தையும் படித்தாகி விட்டது. யாருமே ஹிப்னாடிசம் செய்வதை மட்டும் சொல்லித்தரவில்லை. ஹிப்னாடிசம் பயிற்சி செய்தால் சொக்குப் பொடு போடலாம் மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கலாமென கீறல் விழுந்த ரெக்கார்ட்டு மாதிரி பல பக்கங்களுக்கு விவரித்திருந்தார்களே தவிர ஹிப்னாடிசம் என்றால் எப்படி செய்வது என்பதை கடைசிக்கு முந்திய பக்கம் வரை சொல்லவில்லை. கடைசி பக்கத்தில் சுவற்றில் ஓம் என்பதை ஹிந்தியில் வரைந்து வைத்து வெறித்து வெறித்து இமைக்காமல் பார்த்தால் ஹ்ப்னாடிய சக்தி வசப்படும். அதற்கு திடமனமும், அழகிய கண்களும், வசிய சங்கல்பத்தை 1000000 தடைவை மூளையில் லூப்பில் ஓட வைத்தால் ஒரு வேளை வெற்றிக் கிடைக்கலாம் என்று சொல்லியிருந்தது. அது முயற்சி செய்வதென துணிந்து வெள்ளை சுவரில் கரியில் ஓம் வரைந்து கண்ணில் நீர் முட்ட முட்ட பயிற்சி செய்து பானுப்பிரியா மாதிரியான என் முட்டைக்கண் கூமுட்டை ஆகி அரவிந்த் ஐ ஆஸ்பத்திரிக்கு நடையாய் நடந்தது தான் மிச்சம். போனசாக என் அப்பா என்னை நைய நைசாக புடைத்தார் சுவரில் கிறுக்கியதற்காக.

ஹிப்னாடிச பயிற்சியை பாதியில் விட்ட எபெக்டோ என்னமோ எந்த பொண்ணும் என் பார்வைக்கு மடங்கியதேயில்லை.

அடுத்த தேடல் மன அமைதியை குறித்தது. அவதார புருஷர் கல்கி பகவான் எனக்கு மன அமைதியை போதித்து கேட்டதை கேட்டபடி கிடைக்க வழி செய்வார் என்ற நம்பிக்கை என் அம்மாவுக்கு ஆஸ்துமா அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்கும் வரையிருந்தது. பக்கத்து வீட்டு சுனிதா கூப்பிட்டாள் என்பதற்காக என் அம்மாவும் மன அமைதியை தேடி கல்கி பகவனின் ஆலயத்தை அண்டினார். மூச்சை உள்ளிழுக்க சொன்ன கல்கி பகவான் இரண்டு நிமிடத்துக்கு மூச்சு விட மறந்து விட சொன்னார். ஏனென்றால் அப்போது தான் அவரை அண்டியவர்களுக்கு மன அமைதி அண்டுமாம். அம்மாவின் ஆஸ்துமா வியாதி அதிகமாகி ஆஸ்பத்திரியில் சேர்க்க நேர்ந்தது.

பிறகு யாரை பார்த்தாலும் கல்கி பகவானாகத் தான் காட்சியளித்தார்கள். நியூஜெர்சி நியூடு பாரின் வாசலில் இருந்தவனும் கல்கி பகவான் மாதிரியே காட்சியளித்தார். கொஞ்சநாளைக்கு முன் முளை விட்டு அருவடைக்கு தயாராகியிருந்த என் மீசையை பார்த்தும் நியூடு பார் கேட்டு(gate) கல்கி பகவானுக்கு நம்பிக்கை வரவில்லை. அன்று என்னுடைய வயதுக்கு ஐடி ப்ரூப் கேட்டது என் வாழ் நாளிலும் மறக்க முடியாது. ட்ரைவிங் லைசன்ஸ் இல்லாததால் இந்தியன் என்ற பெருமையோடு என்னுடைய இந்திய பாஸ்போர்ட்டை காண்பித்தேன். அப்போது தேசப்பக்தி எனக்கு பொங்கி வழிந்ததற்கு அளவேயில்லை. கேட்டு பகவான் என் மேல் எப்போதும் ஒரு பார்வையாகவே இருந்தார். அவனால் அங்கு நடந்த நடனத்தைக் கூட ரசிக்க முடியவில்லை. அதிகாலை மூன்று மணி வரை லேப்டான்ஸ்காக வெயிட் பண்ணியும் என் பெயர் கூப்பிடபடவேயில்லை. யாரை குற்றம் சொல்வது. என் தேசப்பக்திக்கா? கல்கி பகவானுக்கா? அந்த நியுடு பாரையா? இல்லை அந்த மன அமைதியையா?

அப்புறம் என் தேடலின் ஈர்ப்பில் கிடைத்தவர் வேதாத்திரி மகரிஷி தோற்று வித்த அறிவுத் திருக்கோயில்கள்.

“உலக சமாதானம்”

“தனி மனித அமைதியே ஒரு குடும்பத்தின் அமைதி, ஒரு குடும்பத்தின் அமைதியே ஒரு சமுதாயத்தின் அமைதி, ஒரு சமுதாயத்தின் அமைதியே ஒரு நாட்டின் அமைதி நாட்டின் அமைதியே உலகத்தின் அமைதி”

போன்ற வேதாத்திரியின் தத்துவங்கள் என்னை கவர்ந்தது. வயசான காலத்தில் ஏதோ அவரால் முடிந்தததை அவரும் மக்களுக்கு செய்துக் கொண்டிருந்தார். முக்கியமாக பார்த்தால் எல்லா சாமியார்களும் (தத்துவஞானிகளும்) ஒரு கோஷத்தை உயர்த்திப் பிடித்துக் கொள்வார்கள் அதாவது மகரிஷியின் “உலக சமதான”த்தைப் போல. ஆனால் (ஒரு வேளை)நல்ல நோக்கத்தில் சொல்லிக் கொடுக்கப்படுபவைகளும் கைமாறிச் செல்லும் போது நோக்கம் மழுங்ககடிக்கப்படுகிறது, தனி மனித வழிபாடு கூடாது என்றுச் சொல்லிக் கொண்டே தனிமனித வழிப்பாட்டைச் சொல்லி கொடுக்கும் கூடாரங்களாக இருந்தது நான் அறிவுத் திருக்கோயிலில் மெம்பரான போது.

வயித்து வழியா மகரிஷி நினைத்துக் கொண்டு அவர் எழுதிய பாடலை பாடுங்கள். பாட்டு என்னவோ தூய தமிழ் தான். நல்ல கருத்து தான். வயித்து வலிக்கும் அந்த பாட்டுக்கும் சம்பந்தம். வாழ்க்கையில் கஷ்டமா மகரிஷியை நினைத்துக் கொள். வேலை கிடைக்கனுமா மகரிஷியை ஆழியாறில் போய் பார். ஆக மொத்தம் மகரிஷியே அந்த சமயத்தில் விரும்பாவிட்டாலும் அவரிடம் சேரும் ஒவ்வொருவருக்கும் அவர் தான் ஹீரோ. திரையில் ரஜினியைப் பார்த்து எதையும் செய்ய துணியும் சாதாரண (படிப்ப)றிவில்லாத ஒரு இரசிகனுக்கும் மகரிஷியின் சிஷ்யர்களுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றுமேயில்லை.

மகரிஷியின் சில டெக்னிக்குகளில் மனவளைக்கலையில் மௌனவிரதம் என்பது பிடிக்கும். காயகல்ப பயிற்சி என்பது இன்று வரை இன்னும் பிடிபடாத ஒன்று. குதத்தை இறுக்கி தளர்த்துவதால் விந்து எப்படி கெட்டிப்படும் அதனால் விளையும் மருத்துவ பயன்களுக்கு என்ன அறிவியல் ஆதாரம்? அவர் 98 வயது வரை காயகல்ப பயிற்சியால் தான் என்று அவர் சிஷ்ய கோடிகள் சூடம் அணைத்து சத்தியம் பண்ணுவது என் மரமண்டைக்கு சத்தியாமா ஒன்றும் புரியவில்லை. ஆதலால் அவரின் ஹீரோ இமேஜை என் மனதிலிருந்து தூக்கியெறிந்து விட்டேன். மக்களை கவனிக்க ஆரம்பித்தேன்.

அன்று ஒரு நாள் என் துணைவியாருக்கு பயங்கரமான காய்ச்சல். வண்டியில் உட்கார்த்திக் அவர்களை டாக்டரிடம் கூட்டிப் போகும் போது வாந்தியால் அவதிப்பட்டார்கள். ரோட் சைடில் நிப்பாட்டி அவர்கள் உடம்பு நடுங்க வாந்தியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னால் எதையும் செய்ய முடியவில்லை. வருகிறவர்கள் போகிறவர்கள் அந்த ரோட் சைட் நடைபாதையில் வந்துக் கொண்டும் போய் கொண்டுதானிருக்கிறார்கள். ஒரு வயது முதிர்ந்தவர் ஏறக்குறைய பிச்சைக்காரன் போல தோற்றம். எங்கள் அருகில் வந்தார். அவர் பிடித்து வைத்திருந்த கோக் பாட்டில் தண்ணீரை நீட்டினார். பேசியது இவ்வளவு தான் “பாட்டில்ல இருக்கிறது நல்ல தண்ணி தான். யூஸ் பண்ணிக்கோ. தயங்காதே”. கருணை நெஞ்சம் கை நீட்டும் போது ஹைஜினிக்காக என்னால் கொடி பிடிக்க முடியாது. நிச்சயம் அந்த நல்ல நெஞ்சத்துக்கு என்ன பெயரோ?

இன்றும் அவர் என் மனதில் ஹீரோ. இப்போவும் அந்த ஹீரோவை புகழ்வதால் எனக்கும், இரஜினி இரசிகர்களுக்கும், சாமியார் பக்த கோடிகளும் என்ன வித்தியாசம்???


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal தமிழ் அசைபட இணையச் செயலி தமிழ் விக்கிபீடியா